விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் லயன் சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரத்தில் கடந்த 11ம் தேதி சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது. நேற்று நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் சிக்னல் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, டிராபிக் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமை தாங்கி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தொடங்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஞானசேகர், போலீசார் ஹரிகுமார், கலைமதி, ஆனந்தராஜ், விழுப்புரம் காமதேனு லயன் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் ராஜேந்திரன், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி, டாக்டர் சுதாகர், கண் பரிசோதகர் பாரி உள்ளிட்ட குழுவினர், கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.