விழுப்புரம் : விழுப்புரத்தில் பள்ளிவாசல் முன் பைக் திருட்டு போனது குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ஆர்.பி.நகரைச் சேர்ந்தவர் பாஷா, 34; இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் வாலாஜா பள்ளிவாசல் முன், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது பைக்கை நிறுத்திவிட்டு, பள்ளிவாசலுக்கு தொழுக சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த பைக்கைக் காணவில்லை.
இதுகுறித்து பாஷா, விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.