மாதவரம், மாதவரம், உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை சந்திப்பில், மொபைல் போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், மாதவரம் தட்டான்குளம் சாலை சந்திப்பில், வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் மாதவரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான மோனீஷ், 22, புழலைச் சேர்ந்த அற்புதராஜ், 20, என்பதும், தங்களது நண்பரிடம், 'டியூக் கே.டி.எம்.,' இருசக்கர வாகனத்தை, 'ஓசி'யாக வாங்கி வந்து, 'மொபைல் போன்' பறித்ததும் தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.