விழுப்புரம் : காணை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 46; இவர், நேற்று தனது நண்பர்களுடன் அருளவாடி தென்பெண்ணையாற்று பகுதியில் குளிக்கச் சென்றார். பிறகு அங்கு கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, அய்யனார் உள்ளிட்டோரை பார்த்து, அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் கேலி செய்துள்ளனர்.
இதனை, அய்யனார் தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில், அய்யனாரின் நண்பர்கள் எத்திராஜ், விமல்ராஜ், சத்யராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ், நவீன், பாபு, பாண்டியன், குயவன்காடுவெட்டியைச் சேர்ந்த அய்யனார் உட்பட 14 பேர் மீதும், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.