கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து 133 அடியானது.
முல்லைப் பெரியாறு அணையில் பெய்த கனமழை காரணமாக டிச. 27ல் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. அதன் பின் மழை குறைந்து நீர்மட்டமும் குறையத் துவங்கியது.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மழையின்றி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4 கன அடியாக மட்டுமே இருந்தது. இந்நிலையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 133 அடியானது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1600 கன அடியாக இருந்தது.
நீர் இருப்பு 5410 மில்லியன் கன அடியாகும். திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களில் 144 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்மட்டம் குறைவால் நீர்திறப்பை சற்று குறைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.