சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நவீன உள்ளரங்கம் உள்ளிட்ட பணிகளை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை விரைவில் துவங்கவுள்ளது.
இங்குள்ள அரங்கம், 1,450 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படவுள்ளது. இதில், திரையரங்கு போன்ற பிரமாண்ட திரை வசதியும் செய்யப்படவுள்ளது.
இதேபோல, நவீன வசதிகளுடன் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட திருக்குறள் ஆய்வு மையம் மற்றும் நுாலகம் அமைக்கப்படஉள்ளது.
வளாகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. நவீன உணவு கூடம் அமைக்கப்படவுள்ளது. அத்துடன், எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.
தேவைப்படும்பட்சத்தில் இரண்டாவது கட்டமாக நிதி ஒதுக்கீடு வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. இப்பணிகள் பொதுப்பணித் துறை வாயிலாக விரைவில் துவங்க உள்ளது.