திருப்பூர்:போயம்பாளையம், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர், பிட்டு குமார், 32 வடமாநில தொழிலாளி. பூலுவபட்டி சிக்னல் அருகே டூவீலரில் வந்த போது எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் மீது மோதி விட்டார்; இதைப்பார்த்த மூவர் வடமாநில தொழிலாளியை தாக்கியதுடன், அவர் வைத்திருந்த மொபைல் போன், 2,500 ரூபாய் பணம் மற்றும் பைக்கை வாங்கி கொண்டு தகராறு செய்துள்ளனர். இது குறித்து, பிட்டுகுமார் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், பெரியசாமி, 20, சரவணன், 19, சுதன்குமார், 21 ஆகிய மூவரை கைது செய்தனர்.