தனியார் உப்பள நிறுவனத்தின் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Added : ஜன 19, 2023 | |
Advertisement
உத்தரகோசமங்கை,-- உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சி ஆனைகுடி கண்மாயில் தனியார் உப்பு நிறுவனம் பணிகள் தொடர்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.களரி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பத்து கிராமங்களுக்கும் ஆனைகுடி கண்மாய் நீர் பயன்படுகிறது. கிராம மக்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பி உள்ளனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் பல
 தனியார் உப்பள நிறுவனத்தின் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்



உத்தரகோசமங்கை,-- உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சி ஆனைகுடி கண்மாயில் தனியார் உப்பு நிறுவனம் பணிகள் தொடர்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களரி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பத்து கிராமங்களுக்கும் ஆனைகுடி கண்மாய் நீர் பயன்படுகிறது. கிராம மக்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பி உள்ளனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி, கேழ்வரகு, குதிரைவாலி விவசாயம் நடக்கிறது.

ஆனைகுடி கண்மாய் நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில் அப்பகுதியில் பெரிய அளவில் தனியார் உப்பு நிறுவனம் உப்பு உற்பத்தி துவக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி உள்ளனர். இதற்கு பல மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு களரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் தனியார் உப்பு நிறுவனத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார், டி.எஸ்.பி., சுபாஷ் ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உப்பள நிறுவனம் பணியை தொடராமல் வாகனங்களை வெளியேற்றியதை அடுத்து விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராமையா கூறுகையில், ஏற்கனவே 1000 ஏக்கர் விளை நிலங்கள் அழிந்து விட்ட நிலையில் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களும் உப்பள நீரால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆனைகுடி கண்மாய் பகுதியில் உப்பளம் அமைந்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும். தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு வழங்கிய ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஒப்படைத்துவிட்டு அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்ல உள்ளோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X