சென்னை, ''சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து, மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் செல்வது வசதியாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சிறப்பாகவும் உள்ளது.
ஆனால், உள்நாட்டு முனையத்தில் இருந்து, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, உடமைகளை எடுத்துச் செல்லும் பயணியர், சிரமம் இல்லாமல் மெட்ரோ ரயிலை அணுக உரிய நவடிக்கை தேவை.
இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது கருத்திற்கு வரவேற்பு தெரிவித்த பலர், அதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.