ஆரோ பீச்சில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Added : ஜன 19, 2023 | |
Advertisement
வானுார் : முதலியார்சாவடி ஆரோ பீச்சில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர்., கோட்டக்குப்பம் அடுத்த முதலியார்சாவடியில் ஆரோவில் பீச் உள்ளது. இங்கு தினமும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த
 ஆரோ பீச்சில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு



வானுார் : முதலியார்சாவடி ஆரோ பீச்சில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர்., கோட்டக்குப்பம் அடுத்த முதலியார்சாவடியில் ஆரோவில் பீச் உள்ளது.

இங்கு தினமும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடற்கரையில், வெளிநாட்டினர் அதிகளவில் குளித்து மகிழ்கின்றனர். ஆரோ பீச் என்று அழைக்கப்படும் ஆரோவில் கடற்கரைக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிட்ட சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருட்களை வீசிச் சென்றுள்ளனர். இதனால், கடற்கரையோர பகுதிகள் முழுதும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளாக கிடக்கிறது.

கடற்கரைக்குச் செல்லும் சாலையோரங்கள் மட்டுமின்றி, மணல் பரப்பிலும், குப்பைகள் அதிகளவில் உள்ளது.

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X