சென்னை, காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, 14 நாட்களுக்கு ஒரு முறை, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.
அதன்படி, நாளை இரவு, 7:00 மணிக்கு, 73வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜன., மாதம் காஷ்மீர் பண்டிதர் சமூகத்திற்கு பெரும் அநீதி இழைத்து, பேரழிவை ஏற்படுத்திய மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, 'காஷ்மீர் பண்டிதர்களின் இனப்படுகொலை' எனும் தலைப்பில், பிரபல எழுத்தாளர் மகேஷ் கவுல் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி' மற்றும் காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி யு-டியூப், காஞ்சி மடத்தின் 'டிவிட்டர்' ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.