உத்தரகோசமங்கை,-- உத்தரகோசமங்கை ஊராட்சி அலுவலகம் அருகே 2001 ல் கட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம் இடிபாடுகளுடன் உள்ளதால் அங்கு பணியாற்ற வி.ஏ.ஓ., அச்சம் அடைந்துள்ளார்.
இந்த கட்டடத்தில் 2013ல் பெயரளவில் பராமரிப்பு பணி நடந்தது. இதனால் இடிபாடுகளுடன் நான்கு ஆண்டுகளாக வி.ஏ.ஓ., அலுவலகம் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது.
உத்தரகோசமங்கை கிராம மக்கள் கூறுகையில், ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் இங்கு பணியாற்ற அச்சப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியே அறை எடுத்து வி.ஏ.ஓ., பணியாற்றி வருகிறார். தரமற்ற கட்டட பணியால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அதே இடத்தில் புதிய வி.ஏ.ஓ., அலுவலகம் கட்ட வேண்டும், என்றனர்.