கீழக்கரை,--செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மற்றும் தேசிய இளைஞர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் சதக்கத்துல்லா தலைமை வகித்தார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்ததான கொடை கண்காணிப்பாளர் சூசை ராஜன் துவக்கி வைத்தார். 120 மாணவர்கள் தானம் செய்தனர். கல்லூரி செஞ்சிலுவை சங்க அலுவலர் பிரவீந், பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.