பழநி:பழநி மலை முருகன் கோயிலில் வழங்கப்படும் கட்டண டிக்கெட்டை ஸ்கேன் செய்த பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பழநி கோயிலில் கட்டண தரிசனத்திற்கு ரூ.10, ரூ. 100க்கு டிக்கெட் தரப்படுகிறது. விசேஷ நாட்களில் ரூ.20, ரூ.200 விலையில் தரப்படுகிறது.
முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட்களில் க்யூ ஆர் கோடு பதியப்பட்டுள்ளது. அவற்றை கட்டண தரிசன வரிசையில் வரும் போது கோயில் பாதுகாவலர்கள் ஸ்கேன் செய்த பின் தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர்.