கடலாடி,--கடலாடி அருகே மலட்டாறு பசும்பொன் நகரில் உள்ள ராமலட்சுமி அம்மன் கோயிலில் பத்தாம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
கோயில் அமைந்துள்ள கருவேல மரத்தில் கண்ணாடி, வளையல், சீப்பு, ரிப்பன் உள்ளிட்டவைகளை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வணங்கினர்.