பழநி:பழநி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை காண, 41 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் ஜன., 27ல் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை தரிசிக்க பக்தர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்களில், 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஜன., 18 முதல் முன்பதிவு துவங்கியது. நேற்று மாலை வரை, 41 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று கடைசி நாள். ஆதார் எண்ணை மட்டும் பதிவுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.