செஞ்சி : செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், பலராமன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் மாணவிகள் சாலைகளில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வயது குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வர கூடாது.
பெற்றோர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேச கூடாது, இருக்கர வானத்தில் செல்லும் போது கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். மாணவிகள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.