திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் பற்றாக்குறை காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் இரு சக்கர வாகனங்கள், அவசர சிகிச்சை பிரிவு செல்லும் வழியில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்குரிய இடத்தை தனியாக ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.