அன்னூர்:பழப்பயிர் செய்வோருக்கு ஒரு எக்டேருக்கு 18,000 ரூபாய் மதிப்புள்ள பழச்செடி கன்றுகள், இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
அன்னூர் வட்டாரத்தில், அல்லப்பாளையம், ஒட்டர்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், பச்சாபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா பேசுகையில், இந்த நான்கு ஊராட்சிகளிலும், எட்டு வகை காய்கறி விதைகள், மானியத்தில் 15 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஐந்து வகை பழ செடிகள் கொண்ட தொகுப்பு, மானியத்தில் 40 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
காய்கறி பயிரிடுவோருக்கு ஒரு எக்டேருக்கு, 7,500 ரூபாயும், பழப்பயிர் செய்வோருக்கு ஒரு எக்டேருக்கு 18,000 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்களும் வழங்கப்படுகின்றன.
ஆர்வம் உள்ளோர் ஆதார், சிட்டா மற்றும் உரிய ஆவணங்களுடன், வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
முகாமில், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.