ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் சார்பில் பிப்.,10ல் செல்வ மகள் சிறுசேமிப்பு திருவிழா அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் நடக்கிறது.
ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய இடங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க ஜன.24க்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம். 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். ஆதார் சேவைகளும் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம், என கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.