திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சின்ன கொம்பேஸ்வரம் பகுதியிலுள்ள, 'அல்தாப்' தோல் தொழிற்சாலையில், வருமான வரித்துறையினர், 10க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு, 7:00 மணிக்கு அதிரடியாக சோதனையில் ஈடுட்டனர்.
அதேபோல, அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய ஆம்பூர் எ.கஸ்பா பகுதியிலுள்ள, 'ருமானா' தோல் பொருட்கள் தயாரிக்கும்தொழிற்சாலையிலும்சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், கணக்கில் வராத சொத்து பத்திரங்கள், ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.