கோவை:மின் வாரிய வட்டங்களுக்கு இடையேயான போட்டிகள்,டாடாபாத் மின் பகிர்மான அலுவலகத்தில் நடந்தது. போட்டியை, தலைமை பொறியாளர் வினோதன் துவக்கி வைத்தார்.
முதல் நாள் உள்விளையாட்டுகளாக செஸ், கேரம் மற்றும் டெனிகாய்ட் போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று பெண்களுக்கான த்ரோபால், இறகுப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
இப்போட்டியில் குந்தா, காடம்பாறை, உடுமலை, கோவை அணிகள் போட்டியிட்டன. டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து மற்றும் த்ரோபால் ஆகிய மூன்று போட்டிகளிலும், கோவை அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.