திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் உத்தரவின் பேரில், நடந்த முகாமில், கண் மற்றும் காது, மூக்கு, தொண்டை, எலும்பு ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், எலும்பு மருத்துவர் சீனுவாசன், கண் மருத்துவர் ரவிச்சந்திரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ராஜசேகரன் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனுார், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.