குன்னுார்:குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் தபால் நிலைய கழிப்பிடத்திற்குள் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
குனனுார் வெலிங்டன் பேரக்ஸ் தபால் நிலைய கழிப்பிடத்திற்குள் காட்டெருமை ஒன்று, மேடான இடத்தில் இருந்து, தவறி விழுந்துள்ளது. அப்போது, கழிப்பிட மேற்கூரை சேதமானது.
தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மேற்பார்வையில், தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, கதவை திறந்து விட்டனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்த காட்டெருமை அருகில் வனப்பகுதிக்கு சென்றது.