பரமக்குடி,--பரமக்குடி முழு நேர கிளை நூலகத்தில் வாசிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.9 முதல் 19 வரை ஐந்தாவது புத்தக திருவிழா நடந்தது. நிறைவு நாளான நேற்று வாசிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். நூலகர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நூலக வாசகர்கள் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
அலைபேசியை புறக்கணித்து புத்தகங்களை கையில் ஏந்துவோம். வருமானத்தில் சிறு தொகையை புத்தகங்களை வாங்க ஒதுக்கி அவற்றை வாசித்து விவாதிப்போம். மன நலனை மேம்படுத்த உதவும் புத்தக வாசிப்பை நாள்தோறும் கடைபிடிப்போம், என உறுதிமொழி எடுத்தனர். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.