கூடலுார்:நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு, '108' ஆம்புலன்சில், 33 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட திட்ட மேலாளர் செல்வமுத்துக்குமார் அறிக்கை:
மலை மாவட்ட மக்கள், '108' ஆம்புலன்ஸ் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, 'பிரசவம், விபத்து, இதய நோய், மூச்சுத் திணறல், வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர்,' என, 33 ஆயிரம் பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 14 ஆயிரத்து 973 பேர் கர்ப்பிணி பெண்கள். அவசரகால மருத்துவ நுட்பிணர்கள் மூலம் '108' ஆம்புலன்சில் 31 பெண்களுக்கு சுகப்பிரசவம் மூலம், குழந்தை பிறந்துள்ளது.
அவசர சிகிச்சை தேவை உள்ளவர்களுக்கு ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டு, சரியான நேரத்தில், மருந்துவமனை கொண்டு சென்றதன் மூலம் பலர், உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை ஏற்றி வரும், 108 ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனை செல்ல பொதுமக்கள், ஓட்டுநர்கள் வழிவிட்டு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.