கூடலுார்:கூடலுார் - கோழிக்கோடு சாலையில் வாகனம் செல்லும் போது ஏற்படும் துாசு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடலுார் - கோழிக்கோடு சாலை, செம்பாலா - நாடுகாணி இடைப்பட்ட சாலை பல இடங்களில் சேதமடைந்து உள்ளது.
இந்நிலையில், சாலையை சீரமைப்பதாக கூறி, சேதமைடைந்த பகுதிகளில் சமீபத்தில் ஜல்லி மற்றும் பாறை துாளை கொட்டி சென்றனர்.
தற்போது, அப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும் போது, எழும் துாசு மண்டலத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணியை விரைவில் துவக்க வேண்டும்,' என்றனர்.