மதுரை:'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்த பிற அமைப்பின் நிர்வாகிகளிடம், என்.ஐ.ஏ., தொடர்ந்து விசாரித்து வருகிறது.
நேற்று இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையிலான குழு மதுரை வந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உட்பட ஆறு பேரிடம் தனித்தனியே விசாரணை நடத்தியது.
இதில், பி.எப்.ஐ., உள்ளிட்ட அமைப்புகளுடனான தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டன.