பொள்ளாச்சி:தபால் துறை சார்பில், 'அம்ரிட்பெக்ஸ் பிளஸ்' என்ற திட்டம், வரும் பிப்., 11ம் தேதி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி, பெண் குழந்தைகளுக்கான, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், அதிக கணக்குகளை துவங்க, கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, தபால் துறை சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
வரும், பிப்., 10ம் தேதி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கோட்ட தபால் கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்தார்.