பல்லடம்:கோர்ட் வளாகத்தில், கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் கருப்பசாமி, 29. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில், 'கியர் பாக்ஸ்' திருடியதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
பல்லடம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில் ஆஜரானார். அப்போது, திடீரென கோர்ட் வளாகத்தில் கிடந்த பிளேடால், கழுத்து மற்றும் கையில் தனக்குத் தானே அறுத்துக் கொண்டார்.
அதுபோல, இவரது மனைவி மஞ்சுளாவும், பிளேடால் கையில் அறுத்துக் கொண்டார். கோர்ட் வளாகத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சைக்கு பின், இருவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.