அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகில் விருதுநகர் ரோட்டில் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. இதன் மேனேஜராக மூர்த்தி, 33, பணியாற்றி வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறுவனத்தை மூடிவிட்டு நேற்று முன் தினம் திறந்து பார்த்தபோது கூரை உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ டிராயரில் இருந்த60 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement