கோவை:வீரபாண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 20ம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி,பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள நாயக்கனுாரில்நடந்தது.18 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும்,நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்டன.
நாக் அவுட் முறையில் நடந்த, முதல் இரண்டு சுற்றுகளில் நான்கு அணிகள் வெற்றி பெற்று, லீக் சுற்றுக்கு முன்னேறின. ஒவ்வொரு அணியும், தலா மூன்று போட்டிகளில் விளையாடின. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோவை மேற்கு மண்டல போலீஸ் அணி முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. வடவள்ளி ஆலயம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, இரண்டு வெற்றிகளுடன் இரண்டாமிடத்தையும், ஏ.பி.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஒரு வெற்றியுடன், மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Advertisement