விருதுநகர்,--விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த பட்டாசு தொழிலாளிகள் சந்திரா 52, சீதாலட்சுமி 44, இருவரும் ஜன.18 ல் பணி முடித்து விஜயகரிசல்குளம் சங்கர் ஓட்டிவந்த வேனில் வந்தனர்.
அப்போது எட்டூர்வட்டம் சுங்கச் சாவடியில் பணம் செலுத்த நின்ற ஜீப்பின் பின்னால் வேன் மோதியது, இதனால் கார், பஸ் என ஒன்றன் பின் ஒன்றாக 3 வாகனங்கள் மோதி சேதமடைந்தன. இதில் வேனில் இருந்த சந்திரா, சீதாலட்சுமி காயமடைந்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.