செங்கல்பட்டு:மதுராந்தகம், சின்னகாலனியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் செங்குட்டுவன் என்கிற செங்கோடன், 32. சாராய வியாபாரி. இவர், கடந்த டிச., மாதம், அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தார்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர் மீது, ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., பிரதீப் பரிந்துரை செய்தார்.
இதையேற்று, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ராகுல்நாத், நேற்று உத்தரவிட்டார்.