கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் உள்ள கோமுகி நதிக்கரையில் நேற்று ஆற்றுத் திருவிழா நடந்தது. இதில் கச்சிராயபாளையம் சுப்ரமணியர் கோவில், வரதராஜ பெருமாள் மலைக்கோவில், உமாமகேஸ்வரர் கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கோமுகி நதிக்கரைக்கு சென்றனர்.
அங்கு தீர்த்தவாரி நடந்தது. பின், உற்சவமூர்த்திகள் மயில், குதிரை, சர்ப வாகனங்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.