ராஜபாளையம்,--ராஜபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கண்மாய் குத்தகை ஏலம் சம்பந்தமாக போலீசாருக்கும் தி.மு.க., வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை ரோடு மயூரநாத சாமி கோயில் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வாண்டையார் குளம், பேராநல்லுார், குமுட்டிகுளம் கண்மாய்களுக்கான குத்தகை ஏலம் நேற்று நடந்தது.
ஏலம் எடுப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.,கவினர் 14 பேர் அலுவலக வளாகத்திற்குள் சென்றனர். இதனை தொடர்ந்து அதிக அளவில் தி.மு.க., வினரின் ஆதரவாளர்கள் வளாகத்திற்குள் நுழைய முயன்றனர்.
முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி எனக் கூறி போலீசார் தி.மு.க.,வினரை தடுத்ததையடுத்து மாற்று வழியில் அலுவலகத்தில் நுழைந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றும் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
டி.எஸ்.பி., ப்ரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின் ஏலம் தொடங்கி அமைதியாக முடிந்தது.