கோவை:பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ -மாணவியருக்கான குடியரசு தின வாலிபால் போட்டி, தருமபுரி, சப்தகிரி இன்ஜி., கல்லுாரியில் நடந்தது.
இதில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற, 38 மாவட்ட அணிகள் போட்டியிட்டன. கோவை மாவட்டம் சார்பில், ஏ.பி.சி., பள்ளி அணி பங்கேற்றது.
இப்போட்டியில் ஏ.பி.சி., அணி, முதல் சுற்றில் தருமபுரி அணியை, 2 - 0; இரண்டாம் சுற்றில் திருநெல்வேலி அணியை 2 - 0; மூன்றாம் சுற்றில் நாமக்கல் அணியை 2 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப்போட்டியில், வேலுார் மாவட்ட அணியுடன் போட்டியிட்டு, 2 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், நான்காம் இடம் பிடித்தது.மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களை பள்ளியின் நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்தினர்.