திருக்கோவிலுார் : பாடியந்தல் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையிலான ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக் சேர், உறியடித்தல் என ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. ஊராட்சி துணைத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
தே.மு.தி.க., கிளை செயலாளர் சங்கர்காந்த், முன்னாள் செயலாளர் சங்கர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முனியன், ரவி, ராஜலட்சுமி, மீனாட்சி உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.