விருதுநகர்,--பஜ்ரங்தள் விருதுநகர் மாவட்ட இணை அமைப்பாளர் மாரிமுத்து, கலெக்டர் மேகநாதரெட்டியிடம் அளித்த மனு:
விஷ்வ ஹிந்து பரிஷத் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் பொறுப்பாளர்களான அசாம் மாநிலத்தில் சம்பு கொய்ரி, ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இளவரசர், தீபக் உள்ளிட்ட 7 பேர் பயங்கரவாதிகளால் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நமது நாட்டில் இது போன்று ஹிந்துக்களின் மீதும், தேசப்பற்றாளர்களின் மீதும் தாக்குதல் தொடர் கதையாகி விட்டது. இந்த தாக்குதல் ஹிந்து சமுதாயத்திற்கு நாடு தழுவிய சவாலாக மாறி உள்ளது.
எனவே இது சம்மந்தமாக குடியரசு தலைவர் தலையிட்டு பயங்கரவாதிகள் மீது கடுமையான முறையில் நடவடிக்கை அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும், என்றார்.