கள்ளக்குறிச்சி : புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம்நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.
முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தொகுதி செயலாளர் நேரு, மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் தாமரைவண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாநில துணை செயலாளர்கள் பொன்னிவளவன், பாலு, பேரறிவாளன், மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.