ரயிலில் ஓட்டுனரான லோகோ பைலட் மற்றும்பாதுகாவலரின் கவனத்தைஈர்க்கும் வகையில் அலாரம் சங்கிலி ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும். பாதுகாப்பு கோருவதற்காக தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டும் பயணிகள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம்.'
இது போன்ற வசதி நமது அரசு பஸ்களில் வந்து விட்டது என்று படத்தைப் பார்த்து விட்டு வாசகர்கள் கருதி விட வேண்டாம்.
இது பொன்னமராவதியிலிருந்து சிவகங்கைசெல்லும் அரசு பஸ். இதில் வலது புறத்தில்மேலே உள்ள ஒரு நீளமான கம்பி பெயர்ந்து தொங்குகிறது. 5 வரிசை சீட்கள் வரை இந்த கம்பி பெயர்ந்துள்ளது. பஸ் வேகமாக (!) செல்லும் போது பயணிகள் மேல் கம்பிகள் இடிப்பதால், நேற்று பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக(!) இப்படி கம்பியை தாங்கிபிடித்தபடி பயணம் சென்றனர்.
கண்டக்டரிடம் 'இந்த கம்பியை பொருத்தவோ அல்லது நீக்கவோ' பயணிகள் கூறியதற்கு, அவர், 'இதெல்லாம் டெப்போவில் சொல்லியாச்சு செய்யவில்லை. நான் என்ன செய்ய' என்ற புலம்பலை தான் பதிலாக தந்துள்ளார்.