சங்கராபுரம், : சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தின விழா நடந்தது.
பேரவை தலைவர் குமணன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் குணா, முன்னாள் வார்டு உறுப்பினர் அன்பு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அரிமா மாவட்ட தலைவர் வேலு, சங்கை தமிழ்ச் சங்க தலைவர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். பேரவை செயலாளர் லட்சுமிபதி வரவேற்றார்.
திருவள்ளுவர் உருவ படத்தை பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் தலைவர் ஆறுமுகம் விழாவை தொடங்கி வைத்தார்.
திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி பற்றி கவிஞர் அறிவுமதிபேசினார்.
வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், முத்தமிழ் முத்தன், மதிவாணன், சண்முகம், பிச்சப்பிள்ளை, தேவ திருவருள், ராதா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சாதிக் நன்றி கூறினார்.