பல கோடி ரூபாய் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு! மீட்டெடுக்க நடவடிக்கை தேவை

Added : ஜன 20, 2023 | |
Advertisement
திருக்கோவிலூர் : திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கோவிலுார் மலையமான் நாட்டின் தலைநகரம். பல்வேறு காலக்கட்டங்களில் பல அரசர்களால் அரசாட்சி செய்யப்பட்டு, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். சைவமும், வைணவமும்

திருக்கோவிலூர் : திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலுார் மலையமான் நாட்டின் தலைநகரம். பல்வேறு காலக்கட்டங்களில் பல அரசர்களால் அரசாட்சி செய்யப்பட்டு, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். சைவமும், வைணவமும் ஒருங்கே தழைத்து வளர்ந்த ஊர்.

எடுத்துக்காட்டாக உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களை பராமரிக்க கடவுள் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக பலரும் நிலங்களை தானமாக வழங்கினர். அத்துடன் தமிழையும், சைவத்தையும் வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஞானியர்மடம் உள்ளிட்ட பல மடங்களும் இங்கு உள்ளது.

கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான பல நுாறு இடங்கள் குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பட்டா மாற்றம் செய்து, விற்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கோவில் இடங்கள் அனைத்தும் முழுமையாக மீட்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை கண்காணித்து செயல்படுத்தும் வகையில், உயர் நீதிமன்றமும் அவ்வப்போது ஆணைகளை பிறப்பித்து வருகிறது.

இச்சூழலில் கோவில் நிலங்களை மீட்பதற்காகவே ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., தாசில்தார், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிலங்களை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளது.

ஆனால் திருக்கோவிலுாரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, பல நுாறு ஏக்கர் நிலங்கள் ஸ்வாஹா செய்யப்பட்டு இருக்கும் நிலையில், ஒரு சென்ட் நிலத்தைக்கூட மீட்பதற்கு இக்குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, பக்தர்கள், பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பலமுறை நினைவூட்டல் செய்து, அறிவுறுத்தியும் கீழிருக்கும் அதிகாரிகள் வழக்கம் போல் சாக்கு போக்குகளை கூறி ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எனவே, திருக்கோவிலுாரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கோவில் நிலங்களை மீட்டெடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X