சிவகங்கை,--தமிழக கவர்னர் ஆர்.என்., ரவியை கண்டித்து சிவகங்கையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கவர்னர் ஆர்.என்., ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசலில் காங்., கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் சிறப்புரை ஆற்றினார். நகர் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். நகர் முன்னாள் தலைவர் இக்பால், பொதுக்குழு எஸ்.எம்., பழனியப்பன், சார்லஸ் விளக்க உரையாற்றினர்.
வட்டார தலைவர்கள் சோனைமுத்து, மதியழகன்,கே.ஆர்., கணேசன், வேலாயுதம், வீரமணி, ராஜாராம், மாவட்ட துணை தலைவர் கணேசன், இளைஞர் காங்., நிர்வாக மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.