சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளதால் மக்கி வீணாகி வருகிறது.
சங்கராபுரத்தில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஷூ, புத்தகப் பை, கிரையான்ஸ் மற்றும் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஸ்வெட்டர், ரெயின்கோட் உள்ளிட்ட இலவசப் பொருட்கள் வழங்கப்படாமல் கடந்த ஒரு ஆண்டாக அலுவலகத்தில் மக்கி வீணாகி வருகிறது.
அவற்றை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிடாததால், கடந்த ஓராண்டாக இப்பொருட்கள் வீணாகின்றன. எனவே, மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.