சிவகங்கை,--சிவகங்கை அருகே கண்ணாரிருப்பு ஊராட்சி தலைவரின் கணவர் போலீசாக இருப்பதால் பொய் வழக்கு போட செய்து மக்களை மிரட்டுவதாக சிவகங்கை எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்தனர்.
கண்ணாரிருப்பு ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி. இவரது கணவர் கண்ணன். மானாமதுரையில் தலைமை காவலராக உள்ளார். இந்த ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகரித்து வருகிறது.
மேலும் அவர்களுக்கு ஓட்டளிக்காத குடும்பத்தினருக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் புறக்கணித்து வருகிறார். மேலும் அவரை பிடிக்காதவர்கள் மீது திருப்பாச்சேத்தி போலீசாரின் உதவியுடன் பொய்வழக்கு போட செய்து மிரட்டி வருவதாக கண்ணாரிருப்பு கிராமத்தினர் சிவகங்கை எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்தனர்.
இம்மனுமீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி.,உறுதி அளித்துள்ளார்.
ஊராட்சி தலைவரின் கணவர் கண்ணன் கூறியதாவது:
தற்போது தான் தேவகோட்டையில் இருந்து மானாமதுரைக்கு மாறுதல் ஆகி வந்துள்ளேன்.விடுப்பில் உள்ளேன்.என் மீது வேண்டும் என்றே புகார் அளிக்கின்றனர்.
ஊராட்சி மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் பல வளர்ச்சி பணிகளை என் மனைவி செய்துள்ளார்.காழ்ப்புணர்ச்சியால் என் மீது புகார் அளித்துள்ளனர், என்றார்.