சிங்கம்புணரி,--சிங்கம்புணரியில் பருவமழை வெள்ளத்திற்கு பிறகு நகருக்குள் பாம்புகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் ஓடும் பாலாறு, உப்பாறு, மணிமுத்தாறுகளில் கடந்தஆண்டு பெய்த மழை காரணமாக 3 முறைவெள்ளம் வந்து இன்று வரை தண்ணீர் ஓடுகிறது. இப்பகுதியில் மலைப் பாம்பு அதிகளவில் பிடிபடுகின்றன.
ஒருபக்கம் பிரான்மலையில் திரியும் பாம்புகள் அடிவார கிராமங்களுக்குள் நுழையும் நிலையில் தற்போது ஆற்றில் அடித்து வரப்பட்ட பாம்புகள் சிங்கம்புணரி நகர் பகுதிக்குள் வருகிறது.
நேற்று கிருங்காக்கோட்டை விலக்கு அருகே உள்ள தேங்காய் கோடவுனில் 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த இடத்தில் 4 மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன.
நகரை ஒட்டிய பகுதியில் அடிக்கடி பாம்புகள் பிடிபடுவது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.