கள்ளக்குறிச்சி : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், தற்போது கிரிக்கெட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.
மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 போட்டிள் நடத்தப்படுகிறது.
இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது கிரிக்கெட் போட்டி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தனி குழுவாகவும், பொதுமக்களுக்கு தனி குழுவாகம் நடக்கிறது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் வரும் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.