சிங்கம்புணரி--சிங்கம்புணரியில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் போதிய கதிரடிக்கும் களம் இல்லாமல்விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் ஆயிரம்ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். பெரும்பாலான இடங்களில் நல்ல விளைச்சல் கண்ட நிலையில் அறுவடை துவங்கியுள்ளது. பல வயல்களில் அறுவடை இயந்திரங்கள் இறங்க முடியாத அளவுக்கு ஈரமாக இருப்பதால் வெளியூர் கூலியாட்கள் மூலம் அறுவடை நடக்கிறது.
வயல்களை ஒட்டிய கண்மாய்களில் முழு அளவில் தண்ணீர் இருப்பதாலும், போதிய கதிரடிக்கும் களம் இல்லாததாலும் கதிரில் இருந்து நெல்லை பிரித்தெடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் நீண்ட தூரம் கதிர்கட்டுகளை தலையில் சுமந்துசெல்ல வேண்டியுள்ளது.
எனவே இப்பகுதியில் வரும் காலங்களில் போதிய கதிரடிக்கும் களம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.