கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமில் 119 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்குகின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 121 பேர் நேற்று நடந்த முகாமில் பங்கு பெற்றனர். அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன், மனநல மருத்துவர் பிரவீனா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். இதில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற தகுதியுடைவர்கள் என்ற அடப்படையில் 119 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.